யாழில் தொழிற் பயிற்சி அதிகார சபையின் விருது வழங்கல் நிகழ்வு!
7 view
தொழிற் பயிற்சி அதிகார சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட விருது வழங்கல் விழா இன்றைய தினம்(04) யாழ்ப்பாணம் வீரசிங்கம் கேட்போர் கூடத்தில் இடம்பெற்று வருகின்றது. யாழ் மாவட்டத்தில் யாழ்ப்பாணம், கைதடி, பண்டத்தரிப்பு, சுன்னாகம், காரைநகர், வல்வெட்டித்துறை ஆகிய ஆறு தொழிற் பயிற்சி அதிகார சபையினையும் உள்ளடக்கி இந் நிகழ்வு இடம்பெறுகின்றது. யாழ் மாவட்ட அனைத்து தொழிற் பயிற்சி அதிகார சபை மூலமாக NVQ-4 level பயிற்சிகளை நிறைவு செய்த மாணவர்களுக்கான (ict, makeup, aluminum, graphic design, pre school, Baker, plumbing) சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வும் இடம் பெறுகின்றது. குறித்த நிகழ்வில் யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், தொழிற் பயிற்சி அதிகார சபையின் யாழ் மாவட்ட உதவிப் பணிப்பாளர் நிரஞ்சன், தொழிற் பயிற்சி அதிகார சபையின் தலைவர் A.T. Ugali keppitipola, மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டானர்.
The post யாழில் தொழிற் பயிற்சி அதிகார சபையின் விருது வழங்கல் நிகழ்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் தொழிற் பயிற்சி அதிகார சபையின் விருது வழங்கல் நிகழ்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
