காவல்துறை உயர் பதவிகளில் மாற்றம்: 64 பேருக்கு இடமாற்றம் – 19 பேருக்கு பதவி உயர்வு!
6 view
7 சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர்கள் மற்றும் ஐந்து பிரதி காவல்துறை மா அதிபர்கள் உட்பட மொத்தம் 64 சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், 19 சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர்கள், பிரதி காவல்துறைமா அதிபர்களாக உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், காவல்துறைமா அதிபர் சந்தன விக்ரமரத்னவினால் பதவி உயர்தப்பட்டுள்ளனர். இடமாற்றம் செய்யப்பட்டவர்கள், தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் (NPC) அனுமதியின் கீழ் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரால் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் நிலந்த ஜயவர்தனவை நிர்வாகத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் பதவிக்கு நியமிக்க பொதுச் சேவைகள் ஆணைக்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது. வட மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் பிரியந்த வீரசூரிய மத்திய மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய மாகாணத்தில் கடமையாற்றிய சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் சஞ்சீவ தர்மரத்ன சப்ரகமுவ மாகாணத்திற்கு…
The post காவல்துறை உயர் பதவிகளில் மாற்றம்: 64 பேருக்கு இடமாற்றம் – 19 பேருக்கு பதவி உயர்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post காவல்துறை உயர் பதவிகளில் மாற்றம்: 64 பேருக்கு இடமாற்றம் – 19 பேருக்கு பதவி உயர்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
