தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படும் திகதி அறிவிப்பு
7 view
உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் 21 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 340 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனு கோரும் அறிவித்தல் இன்று புதன்கிழமை மாவட்ட செயலாளர்களால் வெளியிடப்பட்டதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்கள் மார்ச் 20 ஆம் திகதிக்குள் நியமிக்கப்பட வேண்டும், அதற்கான தேர்தல் மார்ச் 10 க்கு முன்னதாக நடைபெற வேண்டும். அதன்படி மார்ச் மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தலை நடத்துவதற்கு ஆணைக்குழு திட்டமிட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
The post தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படும் திகதி அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படும் திகதி அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
