மானிய விலையில் நடமாடும் அரிசி விநியோகம் ஆரம்பம்!

25 view
காரைநகர் கூட்டுறவு சங்கம் ஊடாக நடமாடும் அரிசி விநியோக சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடிகளினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் உணவுப் பாதுகாப்பு மற்றும் போசாக்கினை உறுதி செய்யும் நோக்கில் வடக்கு கூட்டுறவு அபிவிருத்தி வங்கியின் அனுசரனையில் முதற்கட்டமாக காரைநகர் பிரதேசத்தில் கூட்டுறவு சங்கங்களினூடாக மானிய விலையில் தரமான அரிசியினை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சந்தை விலையிலும் 50 ரூபாய் விலை குறைத்து மானிய அடிப்படையில் வடக்கு மாகாண மக்களுக்கு வழங்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட இச் செயற்றிட்டம் முதல் கட்டமாக காரைநகர் பிரதேசத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த செயற்றிட்டம் மூலம் மக்களின் பொருளாதார சுமையினை ஓரளவுக்கு குறைத்து, உணவுப் பாதுகாப்பு மற்றும் போசாக்கினை உறுதி செய்யும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த திட்டம் தொடர்ச்சியாக மூன்று மாதங்களுக்கு நடைமுறைப்படுத்தப்படும். ஆரம்ப நிகழ்வில் வடக்கு கூட்டுறவு அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள், காரைநகர் பிரதேச செயலாளர், காரைநகர் பிரதேச சபை தவிசாளர், காரைநகர் கூட்டுறவு சங்க…
The post மானிய விலையில் நடமாடும் அரிசி விநியோகம் ஆரம்பம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース