104 பேரை ஆள்கடத்த முயற்சித்த நபருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
6 view
நாடொன்றுக்கு 104 பேரை ஆள்கடத்த முயற்சித்த நபரை ஜனவரி 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மல்லாகம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. மியன்மாரில் இருந்து விரட்டப்பட்ட ரோஹிங்கிய இன முஸ்லீம்கள் பங்களாதேசில் அமைந்திருந்த அகதி முகாமில் தங்கியிருந்த சமயம் இந்தோனேசியாவிற்கு தப்பிச் செல்லும் நோக்கில் படகு மூலம் சட்ட விரோதமாக பயணித்தபோது யாழ்ப்பாணம் மருதங்கேணி அருகே நடுக்கடலில் படகு பழுதடைந்து தத்தளித்தனர். இவ்வாறு தத்தளித்தவர்கள் 2022 டிசம்பர் 17ம் திகதி இலங்கை கடற்படையினரால் காப்பாற்றப்பட்டு டிசம்பர் 18ம் திகதி கடற்படையினரின் படகு மூலம் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு வரப்பட்டு மருத்துவ பரிசோதணைகளின் பின்னர் அங்கு தங்கவைக்கப்பட்டனர். சட்டத்துக்கு புறம்பாக இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட 104 பேர் மற்றும் அவர்களை சட்டத்துக்கு புறம்பாக நாடு கடத்த முற்பட்ட வலையமைப்புக்கு உதவியவருக்கும் எதிராக மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் காங்கேசன்துறை பொலிஸார் வழக்கு தாக்கல் செய்தனர். டிசம்பர் 19ம் திகதி மாலை 105 பேரும்…
The post 104 பேரை ஆள்கடத்த முயற்சித்த நபருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 104 பேரை ஆள்கடத்த முயற்சித்த நபருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
