யாழ்.மாநகர சபையின் ஆட்சி நீடிக்கவேண்டும்! – ஆளுநர் தெரிவிப்பு
7 view
ஜனநாயக வழியில் தெரிவு செய்யப்பட்ட யாழ் மாநகர சபையின் ஆட்சி நீடிக்கவேண்டும் என்பதையே நானும் விரும்புகிறேன் என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தொிவித்திருக்கின்றார். மாநகரசபை விவகாரம் தொடர்பில் எடுக்கப்படவுள்ள நிலைப்பாடு தொடர்பாக கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார். யாழ் மாநகர சபை முதல்வர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது தொடர்பில் மாநகரசபை உறுப்பினர்களுடைய அபிப்பிராயங்களை அறிந்து கொண்டு, அறிக்கை சமர்ப்பிக்குமாறு எனது செயலாளர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளேன். அறிக்கை கிடைத்ததும் சட்டமா அதிபர் மற்றும் தேர்தல் ஆணையாளருடன் கலந்துரையாடி அடுத்தகட்டம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். எனினும் ஜனநாயக வழியில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சி நீடிக்கவேண்டும் என்பது என்னுடைய விருப்பமும் கூட என அவர் மேலும் தெரிவித்தார்.
The post யாழ்.மாநகர சபையின் ஆட்சி நீடிக்கவேண்டும்! – ஆளுநர் தெரிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ்.மாநகர சபையின் ஆட்சி நீடிக்கவேண்டும்! – ஆளுநர் தெரிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
