பூ மழையால் நனையும் நுவரெலியா!!
16 view
நுவரெலியா நகரசபைக்குட்பட்ட பல இடங்களிலும் அம்பேவல, பட்டிபொல ஆகிய பிரதேசங்களில் இன்று (3) அதிகாலை பூ பனி பெய்தது. ஒவ்வொரு வருடமும் டிசெம்பர் மாதத்தில் நுவரெலியாவில் பூ பனி பொழிவு காணப்படும் நிலையில், இந்த வருடத்தின் ஆரம்பத்தில் நுவரெலியா நகரிலுள்ள பூங்கா, தேயிலைத் தோட்டங்களில் பூ பனி பொழிவு காணப்பட்டது. மேலும் இன்று (3) அதிகாலை நுவரெலியாவின் வெப்ப நிலை 5 பாகை செல்சியஸாக காணப்பட்டதால் அதிகம் குளிரான நிலையை மக்கள் எதிர்கொண்டனர். இதேவேளை பூ பனி பொழிவால் தேயிலை, மரக்கறி மற்றும் மலர் உற்பத்திகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
The post பூ மழையால் நனையும் நுவரெலியா!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பூ மழையால் நனையும் நுவரெலியா!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
