வாக்குகளை பெற்று உல்லாசம் அனுபவிக்கும் அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டுவோம் – முபாரக் அப்துல் மஜீட்!
6 view
பொய்யான வாக்குறுதிகளை வழங்கி வாக்குகளை கொள்ளையடித்துச் சென்று உல்லாசம் அனுபவிக்கும் அரசியல் கலாச்சாரத்திற்கு வரும் தேர்தல்களில் மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் முபாரக் அப்துல் மஜீட் தெரிவித்தார். தேர்தல், திணைக்களத்தினால் அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் முதலாவது ஊடகவியலாளர் சந்திப்பு இன்று மாலை புத்தளம் உளுக்காப்பள்ளம் பகுதியில் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் மௌலவி ஸப்வான் சல்மானின் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன் போது கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் முபாரக் அப்துல் மஜீட் மேலும் குறிப்பிடுகையில், தேர்தல் காலங்களில் பொட்டனி வியாபாரிகளாக வரும் முஸ்லிம் கட்சிகள் மக்களின் வாக்குகளை பெற்று தேர்தல் காலங்களில் கொடுத்த வாக்குறுதிகளை தூக்கியெறிந்துவிட்டு தேர்தல் முடிந்தவுடன் அவர்கள் மட்டும் உல்லாசமான வாழ்க்கையை அனுபவித்து வருகிறார்கள் .…
The post வாக்குகளை பெற்று உல்லாசம் அனுபவிக்கும் அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டுவோம் – முபாரக் அப்துல் மஜீட்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வாக்குகளை பெற்று உல்லாசம் அனுபவிக்கும் அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டுவோம் – முபாரக் அப்துல் மஜீட்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
