கஞ்சாச்செடிகளை வளர்த்த குற்றச்சாட்டில், ஒருவர் பொலிஸாரினால் கைது!

6 view
புத்தளம் நவகத்தேகம  பகுதியில் விவசாயத் தோட்டமொன்றில் கஞ்சாச் செடி வளர்த்து வந்த ஒருவர் இன்று பிற்பகல் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கஞ்சாச் செடிகள் சட்டவிரோதமாக வளர்க்கப்படுவதாக பொலிஸாருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய குறித்த பகுதியில் சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர். இதன்போது 10 அடி நீளமுடைய 6 கஞ்சாச் செடிகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நவகத்தேகம கொங்கடவல பகுதியைச் சேர்ந்தஒருவரென பொலிஸார் இதன்போது தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் கைப்பற்றப்பட்ட கஞ்சாச் செடிகள் ஆகியவற்றையும் ஆனமடுவ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நவகத்தேகம பொலிஸார் தெரிவித்தனர்.
The post கஞ்சாச்செடிகளை வளர்த்த குற்றச்சாட்டில், ஒருவர் பொலிஸாரினால் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース