தமிழர் பகுதியில் இடியன் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!
7 view
வவுனியா பூவரசங்குளம் வேலங்குளம் கோவில்மோட்டை பகுதியில் இன்று இடியன் துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (03.01.2023) காலை 10 மணியளவில் பொலிஸாரின் சோதனை நடவடிக்கையில் சட்டவிரோதமாக பதிவுகளின்றி இடியன் துப்பாக்கி வைத்திருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பூவரசங்குளம் வேலங்குளம் கோவில்மோட்டை வீட்டிற்கு சென்ற பொலிசார் வீட்டினை சோதனை செய்த போது பதிவுகள் ஏதுமின்றி சட்டவிரோதமாக துப்பாக்கி ஒன்றை வைத்திருந்ததன் பேரிலே இரண்டு பிள்ளைகளின் தந்தையான 35 வயதுடையவர் இடியன் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைகளின் பின்னர் நாளை நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக மேலும் தெரிவித்தனர்.
The post தமிழர் பகுதியில் இடியன் துப்பாக்கியுடன் ஒருவர் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழர் பகுதியில் இடியன் துப்பாக்கியுடன் ஒருவர் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
