எல்லை நிர்ணயத்தில் முஸ்லிம்களுக்கு அநீதி :மாவட்ட எம்.பிக்களை தலையிடுமாறு முக்கிய அமைப்பு கோரிக்கை!
17 view
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிகழ்ச்சி நிரலுக்கும், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், இரா.சாணக்கியன் போன்றவர்களின் சூழ்ச்சிகளுக்கும் அம்பாறை மாவட்ட எல்லை நிர்ணயகுழு அதிகாரிகள் சிலர் சோரம்போகியுள்ளனரா என்ற சந்தேகம் உள்ளதாகவும், தமிழ் சகோதரர்களுக்கு நன்மை பயக்கவேண்டும் என்பதற்காக திட்டமிட்டு அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களில் முஸ்லிம் உறுப்பினர்களை குறைத்து தமிழ் உறுப்பினர்களை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர் போன்றே தெரிகிறது என கிழக்கின் கேடயம் அமைப்பின் பிரதானியும், அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினருமான எஸ்.எம். சபீஸ் தெரிவித்தார். இன்று அக்கரைப்பற்றில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர் , மட்டக்களப்பு மாவட்டத்தில் தலைதூக்கியுள்ள நிர்வாக பயங்கரவாதம் இப்போது அம்பாறை மாவட்டத்திலும் தலைதூக்க ஆரம்பித்துள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒற்றுமையுடனும் சகவாழ்வுடனும் வாழும் தமிழ்- முஸ்லிம் மக்களுக்கிடையில் சண்டையை மூட்டிவிடும் வேலைத்திட்டங்களை அம்பாறை அரசாங்க அதிபர் காரியாலயத்தில் உள்ள சில உயர் அதிகாரிகள் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. அக்கரைப்பற்று, சம்மாந்துறை, நாவிதன்வெளி,…
The post எல்லை நிர்ணயத்தில் முஸ்லிம்களுக்கு அநீதி :மாவட்ட எம்.பிக்களை தலையிடுமாறு முக்கிய அமைப்பு கோரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post எல்லை நிர்ணயத்தில் முஸ்லிம்களுக்கு அநீதி :மாவட்ட எம்.பிக்களை தலையிடுமாறு முக்கிய அமைப்பு கோரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
