இலங்கையின் குற்றக் கும்பலைச் சேர்ந்த 10 பேர் டுபாயில்! எடுக்கப்பட்ட நடவடிக்கை
7 view
இலங்கையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த பத்து பேர் டுபாயில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களை அந்நாட்டில் இருந்து நாடு கடத்துவதற்கான கோரிக்கையை டுபாய் சட்டமா அதிபருக்கு அனுப்ப அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அறியமுடிகிறது. டுபாய் அரசினால் இலங்கைக்கு அனுப்பப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பலின் தலைவர் ஒருவர், காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்ததன் காரணமாக, டுபாயில் தலைமறைவாகியுள்ள குற்றக்கும்பல் உறுப்பினர்களை இலங்கைக்கு நாடு கடத்துவது தடைபட்டது. இது தொடர்பில் சர்வதேச மன்னிப்புச் சபை டுபாய் அரசாங்கத்திடம் அளித்த முறைப்பாட்டில் குறித்த குற்றக் கும்பல் உறுப்பினர்களை இலங்கைக்கு அனுப்பும் செயற்பாட்டை இடைநிறுத்துமாறு கோரிக்கை விடுத்திருந்தது.
The post இலங்கையின் குற்றக் கும்பலைச் சேர்ந்த 10 பேர் டுபாயில்! எடுக்கப்பட்ட நடவடிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையின் குற்றக் கும்பலைச் சேர்ந்த 10 பேர் டுபாயில்! எடுக்கப்பட்ட நடவடிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
