சூதாட்ட நிலையத்தில் பொலிஸ் அதிகாரியின் கன்னத்தை கடித்த நபர்! யாழில் சம்பவம்
7 view
யாழ்ப்பாணத்தில் உள்ள சூதாட்ட நிலையமொன்றில் ஞாயிற்றுக்கிழமை (01) பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, தப்பிச் செல்வதற்காக பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் கன்னத்தை கடித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரால் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஊர்காவற்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது, சூதாட்ட நிலையமொன்றில் ஊர்காவற்துறையில் பொலிஸார் சோதனை நடத்திய போது ஆறு முதல் ஏழு நபர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சந்தேகநபர்கள் அனைவரும் பொலிஸைக் கண்டு தப்பிச் சென்றிருந்த போதிலும், ஒருவரை பிடிக்க முடிந்தது. எனினும் குறித்த சந்தேக நபர் பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கியதாகவும், தப்பிக்கும் நோக்கில் அவரது கன்னத்தை கடித்ததாகவும் சோதனையில் ஈடுபட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 33 வயதான சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
The post சூதாட்ட நிலையத்தில் பொலிஸ் அதிகாரியின் கன்னத்தை கடித்த நபர்! யாழில் சம்பவம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சூதாட்ட நிலையத்தில் பொலிஸ் அதிகாரியின் கன்னத்தை கடித்த நபர்! யாழில் சம்பவம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
