இரவல் வாங்கிய நகையை அடகுவைத்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை
10 view
திருமணத்திற்கு செல்வதாக கூறி அயல் வீட்டாரிடம் இருந்து இரவலாக பெற்ற நகையை அடகு வைத்த கர்ப்பிணிப் பெண் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். குறித்த கர்ப்பிணிப் பெண் பிரசவத்திற்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்வதற்காகவே தங்க நகையை அடகு வைத்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, பொரளை சீமாட்டி வைத்தியசாலைக்கு கண்காணிப்பு விஜயம் செய்த பதில் நீதவான், சந்தேகநபரான அந்தப் பெண்ணை அடையாளம் கண்டு, அப்பெண்ணை சரீர பிணையில் விடுதலைச் செய்யுமாறு கட்டளையிட்டுள்ளார்.
The post இரவல் வாங்கிய நகையை அடகுவைத்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இரவல் வாங்கிய நகையை அடகுவைத்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
