சட்டபூர்வமாக்கப்படும் கஞ்சா – நினைத்து பார்க்க முடியாதளவிற்கு குவியவுள்ள தொழில் வாய்ப்புக்கள்!
7 view
கஞ்சாவை சட்டபூர்வமாக்கினால் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு தொழில் வாய்ப்புக்களை உருவாக்கலாம் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தேர்தல் நடத்தும் நிலையில் நாட்டின் நிதி நிலைமை இல்லை எனவும் அவர் கூறியுள்ளார். நிதி நெருக்கடிக்கு மத்தியில் தேர்தலை நடத்தினால் பொருளாதார நெருக்கடி மேலும் தீவிரமடையும் எனவும், அதன் தாக்கத்தையும் நாட்டு மக்கள் எதிர்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், நாட்டு மக்கள் தேர்தலை கோரவில்லை எனவும், எதிர்தரப்பினர் மாத்திரமே தேர்தலை கோருகிறார்கள். வெளிநாட்டு கையிருப்பு பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் கஞ்சா பயிர்செய்கைளை சட்டபூர்வமாக்குமாறு நான் குறிப்பிட்ட விடயம் தொடர்பில் ஒரு சில அரச அதிகாரிகள் தவறான கருத்துக்களை குறிப்பிட்டுள்ளார்கள். ஒருசில அரச அதிகாரிகள் தான் நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியுள்ளார்கள். வீதி கடைகளில் விற்பதற்காகவும், அனைவரும் வாங்கி பயன்படுத்துவதற்காகவும் கஞ்சாவை சட்டப்பூர்வமாக்குமாறு கோரவில்லை.…
The post சட்டபூர்வமாக்கப்படும் கஞ்சா – நினைத்து பார்க்க முடியாதளவிற்கு குவியவுள்ள தொழில் வாய்ப்புக்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சட்டபூர்வமாக்கப்படும் கஞ்சா – நினைத்து பார்க்க முடியாதளவிற்கு குவியவுள்ள தொழில் வாய்ப்புக்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
