யாழில் பசு மாடுகளின் உயிரை அதிரடியாக காப்பாற்றிய பொலிஸார்..!
7 view
யாழ்ப்பாணம் பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்க்கு உட்பட்ட குடவதை பகுதியில் இறைச்சிக்காக வெட்டுவதற்க்கு தயாரான நான்கு பசு மாடுகளை பருத்தித்துறை பொலிசார் அதிரடியாக காப்பாற்றியுள்ளனர். பருத்தட்துறை பொலிஸ் பொறுப்பதிகாரி தலமை பொலிஸ் பரிசோதகர் பிரியந்த அமரசிங்க தலமையிலான உப பரிசோதகர் நாமல், உப பரிசோதகர் சேந்தன், பொலிஸ் கான்சபிள்களான தரங்க, பொலிஸ் கான்சபிள் ரீ. டிலோஜன், பொலிஸ் கான்ரபிள் பிறேமகாந்தன் நிசங்க, பொலிஸ் சார்ஜன் ஏக்கநாயக்க, உட்பட்ட குழுவினரே குறித்த அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு இறைச்சிக்காக வெட்டுவதற்காக தயாரான நான்கு பசு மாடுகளையும் காப்பாற்றியுள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்த பருத்தித்துறை பொலீசார், அண்மை நாட்களாக தொடர்ச்சியாக மாடுகள் களவாடப்படுவதாக தமக்கு கிடைத்த தொடர் முறைப்பாடுகளின் அடிப்படையில் தொடர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும், குறித்த பசுக்களின் உரிமையாளர்களை உரிய ஆதாரத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
The post யாழில் பசு மாடுகளின் உயிரை அதிரடியாக காப்பாற்றிய பொலிஸார்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் பசு மாடுகளின் உயிரை அதிரடியாக காப்பாற்றிய பொலிஸார்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
