பசு மாடுகளையும் விட்டுவைக்காத திருடர்கள்..!
15 view
இன்றைய தினம் அதிகாலை முகமாலை பகுதியிலே திருடர்களால் இரண்டு பசு மாடுகள் களவாடப்பட்டுள்ளதாக பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, முகமாலைப் பகுதியில் இன்று அதிகாலை திருடர்கள் இரண்டு விலை உயர்ந்த பசு மாடுகளை திருடி சென்றுள்ளனர். களவாடப்பட்ட மிக விலை உயர்ந்த பசுமாட்டில் ஒன்று கன்று ஈன்று ஒரு மாதங்கள் ஆகின்றனிலையிலேயே களவாடப்பட்டுள்ளது. தாய் பசு பலவாடப்பட்டுள்ளதால் கன்று அழுது புலம்பிய நிலையில் இருப்பதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். திருடப்பட்ட மற்றைய பசுமாடு ஆறு மாதங்கள் கருவுற்ற நிலையிலேயே திருடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. களவாடப்பட்ட பசுவின் கன்று அலறு சத்தத்தை கேட்டு மக்கள் கவலை அடைந்துள்ளனர்.
The post பசு மாடுகளையும் விட்டுவைக்காத திருடர்கள்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பசு மாடுகளையும் விட்டுவைக்காத திருடர்கள்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
