விளையாட்டு, இளைஞர் விவகார அமைச்சின் செயலாளராக கே.மகேசன் நியமனம்!
14 view
08 அமைச்சரவை அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த நியமனங்களை வழங்கியுள்ளார். இதற்கமைய, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் புதிய செயலாளராக, எம்.எம்.பி.கே. மாயாதுன்னே நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இதற்கு முன்னர் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளராகப் பணியாற்றியுள்ளார். மகளிர், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளராகப் பணியாற்றிய எச்.கே.டி.டபிள்யூ. எம்.என்.பி. ஹபுஹின்ன, பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, யாழ்.மாவட்டச் செயலாளராக பணியாற்றிய கே. மகேசன் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளராகவும், தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் மேலதிகச் செயலாளராக பணியாற்றிய எம். யமுனா பெரேரா, மகளிர், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண…
The post விளையாட்டு, இளைஞர் விவகார அமைச்சின் செயலாளராக கே.மகேசன் நியமனம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post விளையாட்டு, இளைஞர் விவகார அமைச்சின் செயலாளராக கே.மகேசன் நியமனம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
