மன்னாரில் மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஒருவர் விளக்கமறியலில்!
6 view
தனது மனைவியின் சகோதரியான பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 26 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரை எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் நேற்று (வியாழக்கிழமை) உத்தரவிட்டுள்ளார். குறித்த சம்பவம் மன்னார் தாராபுரம் கிராமத்தில் இடம் பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில், மன்னார் தாராபுரம் கிராமத்தைச் சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் கடந்த வாரம் காணாமல் போனமை தொடர்பில் குறித்த மாணவியின் பெற்றோர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர். இந்த நிலையில் குறித்த மாணவியை தேடி வந்தனர்.இந்த நிலையில் குறித்த மாணவியின் மூத்த சகோதரியின் கணவர் குறித்த சிறுமி யை தாராபுரம் கிராமத்தில் உள்ள பிரிதொரு வீட்டில் தடுத்து வைத்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்துள்ளதாக தெரியவந்தது. சுமார் 3 தினங்கள் தடுத்து வைக்கப்பட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட தாக தெரியவந்துள்ளது. குறித்த மாணவி தடுத்து வைக்கப்பட்ட…
The post மன்னாரில் மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஒருவர் விளக்கமறியலில்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மன்னாரில் மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஒருவர் விளக்கமறியலில்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
