சுமந்திரன் அணியை நம்ம வேண்டாம் – கஜேந்திரமார் எம்.பி தெரிவிப்பு
37 view
தமிழ் மக்கள் இந்த ஆண்டுடன் விழித்துக் கொள்ளவில்லையென்றால் ,தமிழ்த் தேசியம் முழுமையாக பறிபோகும் என நாடளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். யாழில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்: ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.புதிய அரசியல் அமைப்பு உருவாக்குவது தொடர்பாகவும்,அதன் ஊடக இனப் பிரச்சினைக்கு தீர்வு தருவதாகவும்,அதற்கு ஒரு வருட காலம் தேவை என்றும் தெரிவித்துள்ளார்.அந்த அறிவிப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைபின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் வரவேற்பதாக தெரிவித்துள்ளார். அன்று ரணில் பிரதமராக இருந்த காலத்தில்,அரசியல் அமைப்புச் சபை உருவாக்கப்பட்டு,திருத்தம் ஒன்று முன்வைக்கப்பட்டது.அதை நாம் நன்றாக படித்து,இந்த புதிய அரசியல் அமைப்பு ஒற்றை ஆட்சியை தான் பிரதிபலிக்கிறது அதை நிராகரிக்க வேண்டும் என்று கூறியிருந்தோம்.நாம் நிராகரித்த ஒன்றைத் தான்,இப்போது வேண்டும் என சுமந்திரன் தெரிவித்துள்ளார். அன்றே இந்த “ஏக்கிய இராஜ்ச்சிய” பிரச்சினை வந்தது.ஒற்றை ஆட்சி என்ற சொல் தமிழிலே நீக்கப்பட்டு,யூனிடேரி ஸ்டேட்…
The post சுமந்திரன் அணியை நம்ம வேண்டாம் – கஜேந்திரமார் எம்.பி தெரிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சுமந்திரன் அணியை நம்ம வேண்டாம் – கஜேந்திரமார் எம்.பி தெரிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
