தமிழர்களை தொடர்ந்து இலங்கையிலிருந்து படகுகளில் வெளியேறும் சிங்களவர்கள்
50 view
அண்மையில், ஆஸ்திரேலியாவுக்கு படகு வழியாக சென்று தஞ்சம் கோரிய 183 இலங்கையர்களை ஆஸ்திரேலிய அரசு நாடுகடத்தியிருப்பதாக அந்நாட்டு தரப்பிலிருந்து உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானோர் சிங்களவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரம், போர் சூழல், இன அச்சுறுத்தல்களால் கடந்த காலங்களில் ஆயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் அந்நாட்டைவிட்டு வெளியேறி பல்வேறு நாடுகளில் தஞ்சம் கோரி இருக்கின்றனர். இவ்வாறு தமிழர்கள் வேறு நாடுகளில் தஞ்சம் கோருவது தொடர் நிகழ்வாக இருந்து வருகிறது. ஆனால், இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி சிங்களவர்கள் பலரையும் தஞ்சம் கோர வைத்திருக்கிறது. இந்திய தலைநகர் புதுதில்லியில் ஆசிய கடலோர காவல்படைகளின் தலைமை அதிகாரிகளுக்கு இடையிலான சந்திப்பு நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஆஸ்திரேலியாவின் கடல்சார் எல்லைக் கட்டளையின் தளபதியும் எல்லைகள் இறைமை நடவடிக்கையின் தளபதியுமான ஜஸ்டின் ஜோன்ஸ் இலங்கையர்கள் நாடுகடத்தப்பட்டதை உறுதிச் செய்திருக்கிறார். நெடுந்தூர கடல் பயணித்துக்கு தகுதியற்ற 6 மீன்பிடி படகுகளில் ஆஸ்திரேலிய எல்லைக்குள் வந்த இலங்கையர்கள்- பெரும்பாலானோர்…
The post தமிழர்களை தொடர்ந்து இலங்கையிலிருந்து படகுகளில் வெளியேறும் சிங்களவர்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழர்களை தொடர்ந்து இலங்கையிலிருந்து படகுகளில் வெளியேறும் சிங்களவர்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
