கோழி இறைச்சியின் விலை குறைந்தது
91 view
சந்தையில் கோழி இறைச்சியின் விலை ஓரளவு குறைந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, கடந்த காலத்தில் ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி 1500 ரூபாயாக இருந்த நிலையில் தற்போது அது 1080 ரூபாயாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சந்தையில் கோழி இறைச்சி மற்றும் முட்டை தேவையை பூர்த்தி செய்ய முடியாததால் அண்மைக்காலமாக விலை அதிகரிப்பு ஏற்பட்டது. விலை அதிகரிப்பு காரணமாக மக்கள் கோழி இறைச்சியை கொள்வனவு செய்வதை தவிர்க்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.
The post கோழி இறைச்சியின் விலை குறைந்தது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கோழி இறைச்சியின் விலை குறைந்தது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
