22 ஆவது திருத்தத்துக்கு ஆதரவு! விக்னேஸ்வரன் அறிவிப்பு
40 view
குறைபாடுகள் இருப்பினும் நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்வதற்கான முதலடியாக இருக்கும் என்பதனால் 22 ஆவது அரசமைப்பு திருத்தத்தை ஆதரிக்க தீர்மானித்துள்ளதாகத் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் 22 ஆவது அரசமைப்பு திருத்தம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அதன்போது அவர் மேலும் கூறுகையில், “எவ்வாறான குறைபாடுகள் காணப்பட்டாலும் இந்தச் சட்டமூலம் உண்மையில் சரியான பாதையில் செல்வதற்கான முதலடியாக இருக்கும். இதற்கு எதிராக வாக்களிப்பது இருக்கும் நிலைமையை மேலும் எடுத்துச் செல்வதற்கு காரணமாக இருக்கலாம். பிரதிகூலங்கள், அனுகூலங்கள் ஜனாதிபதி முறைமை அறிமுகப்படுத்தும் போதே எதிர்பார்த்தமையே. முழு நாடும் ஜனாதிபதியைத் தெரிவு செய்வதால் அவர் அதற்குப் பொறுப்புப் கூறுபவராக இருக்கின்றார். இதில் பிரதிகூலங்களாக இது சர்வாதிகாரப் போக்குக்கு வழிவகுக்கும். அதிகார துஷ்பிரயோகங்கள் மற்றும் அதிகார பிரிப்புகள் ஏற்படலாம். நெகிழ்வுத் தன்மை இல்லாது உள்ளது. அதிக செலவு மிக்கதாக உள்ளதுடன், ஊழலுக்கும்…
The post 22 ஆவது திருத்தத்துக்கு ஆதரவு! விக்னேஸ்வரன் அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 22 ஆவது திருத்தத்துக்கு ஆதரவு! விக்னேஸ்வரன் அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
