மட்டக்களப்பில் காணிகள் வழங்கி தமிழ் ஊடகவியலாளர்களின் வாய்கள் அடைப்பு! – பிள்ளையான் குற்றச்சாட்டு
6 view
மட்டக்களப்பு மாவட்டத்தில் 2 ஆயிரம் ஏக்கர் வரையிலான அரச காணிகள் அதிகாரிகளால் மோசடியான வகையில் விற்கப்பட்டுள்ளன என்றும், இது தொடர்பான விடயங்கள் தமிழ் ஊடகங்களில் வெளிவராமைக்கு அங்குள்ள ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் 10 பேர்சர்ஸ் காணிகள் வழங்கப்பட்டு அவர்களின் வாய்கள் அடைக்கப்பட்டுள்ளமையே காரணம் என்றும் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற நீதி அமைச்சின் 5 திருத்தச் சட்டங்கள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அதன்போது இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் மேலும் கூறுகையில், “மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க காலத்தில் கொண்டுவரப்பட்ட காணி சீர்திருத்த ஆணைக்குழு ஊடாக 7 ஆயிரம் அல்லது 9 ஆயிரம் ஏக்கர் காணிகள் சுவீகரிக்கப்பட்டன. அந்தக் காணிகளில் மோசடிகள் இடம்பெற்றுள்ளன. கடந்த 16 ஆம் திகதி தென்பகுதி சிங்களப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மட்டக்களப்பில் அதிகாரிகள் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை கொள்ளையடித்த விற்றுள்ளனர் என்று அந்தச் செய்தியில்…
The post மட்டக்களப்பில் காணிகள் வழங்கி தமிழ் ஊடகவியலாளர்களின் வாய்கள் அடைப்பு! – பிள்ளையான் குற்றச்சாட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மட்டக்களப்பில் காணிகள் வழங்கி தமிழ் ஊடகவியலாளர்களின் வாய்கள் அடைப்பு! – பிள்ளையான் குற்றச்சாட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
