யக்கலமுல்லையில் துப்பாக்கிச்சூடு – குழந்தை உட்பட மூவர் காயம்
20 view
யக்கலமுல்லையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் குழந்தை உட்பட மூவர் காயமடைந்துள்ளனர். யக்கலமுல்லை களுவலகல பகுதியில் இன்று (புதன்கிழமை) முற்பகல் 11.30 மணியளவில் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதுடன், இதன்போது 3 வயது குழந்தையே காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் குறித்து இதுவரையில் கண்டறியப்படாத நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெமுத்து வருகின்றனர்.
The post யக்கலமுல்லையில் துப்பாக்கிச்சூடு – குழந்தை உட்பட மூவர் காயம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யக்கலமுல்லையில் துப்பாக்கிச்சூடு – குழந்தை உட்பட மூவர் காயம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
