புதிய பிரதமராக பசில்? -பந்துல வெளியிட்ட தகவல்!

36 view
முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு பிரதமர் பதவியை வழங்குவது தொடர்பாக இதுவரையில் கலந்துரையாடப்படவில்லை என வெகுஜன ஊடக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரச தகவல் திணைக்களத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டில் இருக்கும் பசில் ராஜபக்ஷ நாடு திரும்பிய பின்னர் பிரதமர் பதவியை வழங்குவதற்கான ஏற்பாடுகள் உள்ளதா? என ஊடகவியலாளர் ஒருவர் இதன்போது கேள்வியெழுப்பினார். அந்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், அமைச்சரவையில் இதுபோன்ற விடயங்கள் குறித்து விவாதிக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
The post புதிய பிரதமராக பசில்? -பந்துல வெளியிட்ட தகவல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース