தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை முழுவிவரம்
12 view
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தில் விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி 2018-ல் மக்கள் போராட்டம் நடத்திய போது தூப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. சட்டப்பேரவையில் தாக்கல் செய்த தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் அறிக்கையின் விவரம்: போராட்டக்காரர்களை எச்சரிக்கும் விதமாக அவர்களுக்கு எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் ஓடிக்கொண்டிருந்தபோது அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் கலவரத்தை கட்டுப்படுத்த காவல்துறை உயர் அதிகாரிகள் தவறிவிட்டனர். ஸ்டெர்லைட் கலவரத்தை கட்டுப்படுத்த காவல்துறை உயர் அதிகாரிகளிடம் ஒருங்கிணைப்பு இல்லை போராட்டக்காரர்கள் 5 பேர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். கலவரம் நடந்து கொண்டுருந்த போது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரும், எஸ்.பி.யும் ஊரில் இல்லை எனவும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரர்களை ஒடுக்குவதாக எண்ணி காவல் துறையினர் வரம்பு மீறி செயல்பட்டுள்ளனர். தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்குள் புகுந்து…
The post தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை முழுவிவரம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை முழுவிவரம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
