இரண்டாவது பாடலை வெளியிடும் செல்வராகவன் படக்குழு!
19 view
பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. அதன்பின்னர் இவர் இயக்கிய ‘திரெளபதி’, ‘ருத்ரதாண்டவம்’ ஆகிய படங்கள் வரவேற்பை பெற்று சில சர்ச்சைகளையும் கிளப்பியது. இப்படங்களை தொடர்ந்து இவர் இயக்கியுள்ள ‘பகாசூரன்’ படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதையின் நாயகனாகவும், நட்டி நட்ராஜ், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்திருக்கிறார்கள். பகாசூரன் இந்த படத்திற்கு சாம்.சிஎஸ் இசையமைக்கிறார். ‘பகாசூரன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் டீசர் மற்றும் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது. இந்நிலையில், ‘பகாசூரன்’ படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதையும் படியுங்கள்: நடிகர் சல்மான் கான் போதை பொருளை பயன்படுத்தியவர் – யோகா குரு ராம்தேவ் பரபரப்பு பேச்சு பகாசூரன் அதன்படி, இப்படத்தின் இரண்டாவது பாடல் ‘காத்தமா’ நாளை வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
The post இரண்டாவது பாடலை வெளியிடும் செல்வராகவன் படக்குழு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இரண்டாவது பாடலை வெளியிடும் செல்வராகவன் படக்குழு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
