போரதீவுப்பற்று – முனைத்தீவு கிராமத்திற்குள் புகுந்த காட்டுயானை தாக்குதலினால் ஒருவர் உயிரிழப்பு
12 view
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முனைத்தீவு கிராமத்திற்குள் புகுந்த காட்டுயானையின் தாக்குதலினால் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை 2.30மணியளவில் முனைத்தீவு கிராமத்திற்குள் புகுந்த காட்டுயானை வீட்டிலிருந்து வெளியேவந்தவரை தாக்கிகொன்றுள்ளது. முனைத்தீவு பிரதான வீதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் அப்பகுதியை சேர்ந்த 69வயதுடைய காளிக்குட்டி சங்கரப்பிள்ளை என்பரே உயிரிழந்துள்ளார். இதன்போது காட்டுயானை வீட்டின் பகுதிகளையும் தாக்கி சேதப்படுத்தியுள்ளதுடன் யானையின் அச்சுறுத்தல் காரணமாக அப்பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டது. இது தொடர்பில் வெல்லாவெளி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்;டதை தொடர்ந்து அப்பகுதிக்கு வந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர். மரண விசாரணையை தொடர்ந்து சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. போரதீவுப்பற்று பகுதியின் காட்டுப்பகுதியை அண்டிய பகுதிகளில் மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி வந்த யானைகள் இன்று மக்கள் செறிந்துவாழும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
The post போரதீவுப்பற்று – முனைத்தீவு கிராமத்திற்குள் புகுந்த காட்டுயானை தாக்குதலினால் ஒருவர் உயிரிழப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post போரதீவுப்பற்று – முனைத்தீவு கிராமத்திற்குள் புகுந்த காட்டுயானை தாக்குதலினால் ஒருவர் உயிரிழப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
