22 நிறைவேறினால் மாத்திரமே இலங்கையில் புதிய அரசியலமைப்பு! நீதியமைச்சர்

29 view
இலங்கையில் புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குவது தொடர்பில் பேசுவதற்கு தற்போது உரிய நேரம் அல்ல என்று நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஏற்கனவே கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது, அமைக்கப்பட்ட 9 பேரைக்கொண்ட குழுவின் அரசியலமைப்பு வரைபு வெளியாகியுள்ளது. எனினும் அதனை தம்மால் சரிபார்க்க முடியாது, அதற்காக அமைக்கப்படும் அரசியலமைப்பு குழு ஒன்றினால் மாத்திரமே அதனை சரிபார்க்க முடியும் என்றும் விஜயதாச குறிப்பிட்டுள்ளார். புதிய அரசியலமைப்பை கொண்டு வருவதற்கு அல்லது தீர்மானிப்பதற்கு முன்னர் 22வது திருத்தத்தை நிறைவேற்ற வேண்டும். புதிய அரசியலமைப்பை எவ்வாறு உருவாக்குவது என்பது குறித்து ஆலோசிப்பதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதியை கோரியுள்ளேன். அரசியலமைப்பு செயல்முறை மக்களின் அங்கீகாரத்துடன் செய்யப்பட வேண்டும். அப்போதுதான் அது வெற்றிகரமான அரசியலமைப்பாக அமையும். அத்துடன் அது நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அங்கீகாரத்தைப் பெறுவது போன்றே முக்கியமானது. 22வது திருத்தச் சட்டமூலத்தின் மீதான இரண்டாவது வாசிப்பு விவாதம் ஒக்டோபர் 20 மற்றும்…
The post 22 நிறைவேறினால் மாத்திரமே இலங்கையில் புதிய அரசியலமைப்பு! நீதியமைச்சர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース