வாள்வெட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் பலி!
40 view
கிளிநொச்சி ஏ-9 பிரதான வீதியில் கடந்த 06.10.2022 அன்றைய தினம் வட்டக்கச்சி மாயனூர் பகுதியில் வசித்துவந்த குடும்பஸ்தரான 33 வயதுடைய ஜெயசீலன் என்ற 03 பிள்ளைகளின் தந்தை படுகாயமடைந்திருந்தார். வாள்வெட்டுக்கு இலக்கான நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பயனளிக்காத நிலையில் மீண்டும் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில் நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பிற செய்திகள்
The post வாள்வெட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் பலி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வாள்வெட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் பலி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
