திலினி பிரியமாலியின் கைத்தொலைபேசி தொடர்பாக மேலதிக தகவல்கள் வெளியாகின
13 view
நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலியின் கைத்தொலைபேசி தொடர்பாக மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறையில் உள்ள பெண் கைதி ஒருவரிடம் ஐம்பதாயிரம் ரூபாய் தருவதாக கூறி இந்த கையடக்கத் தொலைபேசியை பெற்றுக்கொண்டுள்ளதாக தற்போதைய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு இந்த கைத்தொலைபேசி எப்படி வந்தது என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. தற்போது இந்த கையடக்கத் தொலைபேசி குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் கட்டுப்பாட்டில் உள்ளதுடன், அதன் தரவுகள் ஆராயப்பட்டு வருகின்றன.
The post திலினி பிரியமாலியின் கைத்தொலைபேசி தொடர்பாக மேலதிக தகவல்கள் வெளியாகின appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post திலினி பிரியமாலியின் கைத்தொலைபேசி தொடர்பாக மேலதிக தகவல்கள் வெளியாகின appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
