மக்கள் நீதி மைய செயலாளர்- ஈ.பி.டி.பி முக்கியஸ்தர் சந்திப்பு!

16 view
வன்னியில் பின் தங்கிய கிராமம் ஒன்றில் நூலகம் ஒன்றை அமைப்பதற்கும், ஆயிரம் நூல்களைப் பெற்றுத் தரவும் பத்மஸ்ரீ கமலஹாசன் ஊடாக நடவடிக்கை எடுப்பதாக இந்தியாவின் மக்கள் நீதிமைய மாநில பிரிவு செயலாளரும், சட்டத்தரணியுமான எம்.ஸ்ரீதர் உறுதியளித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் தெரிவித்துள்ளார். பத்மஸ்ரீ கமலஹாசனின் மக்கள் நீதி மைய மாநில பிரிவு செயலாளரும், சட்டத்தரணியுமான எம்.ஸ்ரீதருக்கும், ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் (ஈபிடிபி) வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபனுக்குமிடையில் கலந்துரையாடலொன்று வவுனியா, மன்னார் வீதியில் அமைந்துள்ள மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போது, யுத்தத்திற்கு பின்னரான வன்னியின் தற்போதைய நிலமைகள் மற்றும் வன்னி மக்களின் பொருளாதார, வாழ்வாதார நிலைமைகள் தொடர்பாக கேட்டறிந்த சட்டத்தரணி எம்.ஸ்ரீதர், வன்னி மாவட்டத்தின் பின் தங்கிய கிராமம் ஒன்றில் நூலகம் அமைப்பதற்கும், அவ் நூலகத்திற்கு  ஆயிரம் புத்தகங்களை வழங்குவதற்கும் பத்மஸ்ரீ கமலஹாசன் ஊடாக நடவடிக்கை எடுப்பதாக இதன்போது உறுதியளித்திருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் தெரிவித்தார்.  …
The post மக்கள் நீதி மைய செயலாளர்- ஈ.பி.டி.பி முக்கியஸ்தர் சந்திப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース