வெளிநாட்டு வேலைக் காக குவியும் மக்கள்
35 view
இந்த ஆண்டு வெளிநாட்டு வேலைகளுக்காகப் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 241,034 ஐ தாண்டியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு 330,000 பேருக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை வழங்குவதே அந்த பணியகத்தின் இலக்காகும். நாட்டில் வருடாந்தம் வெளிநாட்டு வேலைகளுக்காக வெளியேறுபவர்களின் எண்ணிக்கை பொதுவாக இரண்டு இலட்சத்து எண்பதாயிரத்திற்கும் மூன்று இலட்சத்திற்கும் இடைப்பட்டதாக காணப்படும். மத்திய வங்கியின் அறிக்கையின்படி, 2014ஆம் ஆண்டு அதிகளவானவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றதாகவும், அந்த எண்ணிக்கை 300,703 ஆக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. பிற செய்திகள்
The post வெளிநாட்டு வேலைக் காக குவியும் மக்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வெளிநாட்டு வேலைக் காக குவியும் மக்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
