கல்முனை சாஹிரா தேசிய பாடசாலை 14 பதக்கங்களுடன் தேசிய மட்டத்துக்கு தெரிவு

45 view
கல்முனை சாஹிரா தேசிய பாடசாலை, கிழக்கு மாகாண மட்ட மெய்வல்லுனர் போட்டிகளில் 14 பதக்கங்களுடன் தேசிய மட்டத்துக்கு தெரிவாகியுள்ளது. கடந்த 5 ம் திகதி தொடக்கம் 9 ம் திகதி வரை கந்தளாய் லீலாரத்ன விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று நிறைவுக்கு வந்த பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலை மாணவர்கள் 4 தங்கப் பதக்கங்கள், 4 வெள்ளிப் பதக்கங்கள்,6 வெண்கலப் பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளனர்.. இம்மாணவர்களை சிறப்பாக வழிநடத்திய அதிபர் முஹம்மட் ஜாபிர், பயிற்சிகளை வழங்கிய பாடசாலை உடற்கல்வி ஆசிரியர்கள், விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்கள், போட்டியில் பங்கேற்று தமது திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்களுக்கும் பாடசாலை சமூகம் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளது. பிற செய்திகள்
The post கல்முனை சாஹிரா தேசிய பாடசாலை 14 பதக்கங்களுடன் தேசிய மட்டத்துக்கு தெரிவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース