இலங்கை தொடர்பான ஐ.நா தீர்மானம் திருப்திகரமானதாக இல்லை- காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் கவலை!
40 view
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை மனித உரிமைகள் மீறல் தொடர்பான தீர்மானம் திருப்திகரமானதாக இல்லை இது தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளை மேலும் தூண்டும் என காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் கவலை வெளியிட்டுள்ளனர். ஐக்கிய இராச்சியம் தலைமையிலான, அமெரிக்கா, கனடா, ஜேர்மனி, மொண்டெனேக்ரோ, வடக்கு மாசிடோனியா, மலாவி மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் உள்ளடங்கிய, இலங்கைக் கான தீர்மானம் எடுக்கும் குழு முன்வைத்த புதிய தீர்மானத்தின் அடிப்படையில் ஐநா மனித உரிமைகள் பேரவை இலங்கையில் நடைபெற்ற மனித உரிமைகள் மீறல் தொடர்பாக எடுத்துள்ள தீர்மானங்கள் திருப்திகரமானதாக இல்லை என இலங்கையில் பாதிக்கப்பட்ட தரப்பினர் வேதனையுடன் பதிலளித்துள்ளனர். இது தொடர்பாகக் காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் பாதிக்கப்பட்ட ஏனைய குழுக்களின் குடும்பத்தினர் தெரிவிக்கும்போது, “பதின்மூன்று வருடங்களுக்கு முன்னர் தமிழ் மக்களுக்கு எதிரான போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகளை செய்த இலங்கை பாதுகாப்புப் படைகள் மற்றும் அரசியல் தலைமைகளை காப்பாற்றி, பிணையில் எடுக்கும் விதமாக…
The post இலங்கை தொடர்பான ஐ.நா தீர்மானம் திருப்திகரமானதாக இல்லை- காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் கவலை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கை தொடர்பான ஐ.நா தீர்மானம் திருப்திகரமானதாக இல்லை- காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் கவலை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
