இந்து ஆலயங்களில் தொல்பொருள் திணைக்களம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துமாறு கோரி கையெழுத்து வேட்டை
8 view
இந்து ஆலயங்களில் தொல்பொருள் திணைக்களம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துமாறு கோரி மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் நாட்டின் ஜனாதிபதிக்கு மகஜர் அனுப்புவதற்கு கையெழுத்து வேட்டை வாகரை கதிரவெளி பிரதேசத்தில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், கிழக்கு இந்து ஒன்றிய தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற கையெழுத்து வேட்டையில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு மகஜரில் கையெழுத்தினை வைத்தனர். நாட்டின் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கும் மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கிழக்கு மாகாணத்தில் பிரசித்தி பெற்று விளங்கும் தேவாரப்பாடல் பெற்ற தலமும் இராவணனால் வழிபடப்பட்ட தலமும் இலங்கையில் விஜயனின் வருகைக்கு முற்பட்ட தலமுமான திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலயம் தற்போது தொல்பொருள் திணைக்களத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றது. இவ்வாலய அபிவிருத்திகள் இவர்களால் தடுக்கப்படுகின்றது. இதேவேளை பதினெட்டு ஏக்கர் பரப்பளவு உடைய இவ் ஆலய எல்லையில் தொல்பொருள் திணைக்களம் பெரும்பான்மை இனத்தின் வியாபார நிலையங்களுக்கு அனுமதி…
The post இந்து ஆலயங்களில் தொல்பொருள் திணைக்களம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துமாறு கோரி கையெழுத்து வேட்டை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இந்து ஆலயங்களில் தொல்பொருள் திணைக்களம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துமாறு கோரி கையெழுத்து வேட்டை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
