இலங்கைக்கு மீண்டும் பின்னடைவு – சுருங்கிய பொருளாதாரம்!
32 view
இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது, 2022 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் வருடாந்தம் 8.4 வீதமாக சுருங்கியுள்ளது. இதனை தொகைமதிப்பு, புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய , விவசாயம் 8.4 சதவீதமும், தொழில்துறை 10 சதவீதமும், சேவைகள் 2.2 சதவீதமும் சுருங்கியுள்ளன. மேலும்,மின்சார துண்டிப்பு, எரிபொருள் தட்டுப்பாடு, இறக்குமதி செய்யப்பட்ட மூலப்பொருட்களின் பற்றாக்குறை, உரம் மற்றும் பயணிகள் போக்குவரத்தில் ஏற்படும் இடையூறுகள் ஆகியவை பொருளாதாரத்தை பாதித்துள்ளதாக புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வேளாண்மையில், பயிர்ச்செய்கை ஓராண்டுக்கு முன் இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில், 32.3 சதவீதம் சரிந்துள்ளது, இதில் தேயிலை 19.7 சதவீதம், நெல் 15.6 சதவீதம், கடல் மீன்பிடி 15.3 சதவீதம், இறப்பர் 13.7 சதவீதம், கால்நடை உற்பத்தி 13.6 சதவீதம், காய்கறிகள் 13.2 என்ற வீதத்தில் குறைந்துள்ளன. ஆனால் நன்னீர் மீன்பிடி 11.2 சதவீதமும், தென்னை 10.5 சதவீதமும், வனவியல் மற்றும் மரம் வெட்டுதல் 9.0 சதவீதமும், பலசரக்கு பொருட்கள் 3.2…
The post இலங்கைக்கு மீண்டும் பின்னடைவு – சுருங்கிய பொருளாதாரம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கைக்கு மீண்டும் பின்னடைவு – சுருங்கிய பொருளாதாரம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
