தியாக தீபம் தீலிபனின் 35வது நினைவு தினம் யாழ்.பல்கலையில் அனுஸ்டிப்பு
6 view
கொழும்பு, செப் 15 ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 35வது நினைவு தினம், இன்றையதினம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அனுஸ்டிக்கப்பட்டது. பல்கலைக்கழக வளாகம் சிவப்பு மஞ்சள் கொடிகள் கட்டப்பட்டு, தியாக தீபம் தீலிபன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த 9.45 மணியளவில் நினைவேந்தல் ஆரம்பித்ததுடன், தியாக தீபம் தீலிபனின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் அனுஷ்டிக்கப்பட்ட இந்த நினைவேந்தலில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ஊழியர்கள் எனப் பலரும் உணர்வு பூர்வமாக கலந்துகொண்டனர். வடக்கு கிழக்கு மாகாணங்களில் புதிதாக திட்டமிடப்படும் சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும், சிறைகளிலும், முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும், அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும், ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்பட வேண்டும், தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட…
The post தியாக தீபம் தீலிபனின் 35வது நினைவு தினம் யாழ்.பல்கலையில் அனுஸ்டிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தியாக தீபம் தீலிபனின் 35வது நினைவு தினம் யாழ்.பல்கலையில் அனுஸ்டிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
