கோத்தாவால் வழங்கப்பட்ட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைமை பதவி இரத்து
14 view
கோத்தாபயவால் வழங்கப்பட்ட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைமை பதவி இரத்து முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச வழங்கிய மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைமைப் பதவிகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. புதிய நியமனங்கள் இடம்பெற்ற பின்னர் அது தொடர்பான வழிகாட்டல் வழங்கப்படும் என்று பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலர் மாயாதுன்னே அறிவித்துள்ளார். இந்தக் கடிதம் மாவட்டச் செயலகங்களுக்கு நேற்று கிடைத்துள்ளது.அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- முன்னாள் ஜனாதிபதியின் ஆட்சிக்காலத்தில் நியமிக்கப்பட்டிருந்த மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர்கள் மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர்களின் நியமனங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளமையால் புதிய நியமனங்கள் மேற்கொள்ளப்படும் வரை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களை நடத்திச் செல்வதற்கான இயலுமை காணப்படுவதில்லை. ஆகையால், ஜனாதிபதியால் புதிய மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர்கள் மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர்கள் நியமிக்கப்பட்டதன் பிற்பாடு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களை நடத்துவதற்கு அவசியப்படும் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அறியத்தருகின்றேன். அத்தோடு,…
The post கோத்தாவால் வழங்கப்பட்ட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைமை பதவி இரத்து appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கோத்தாவால் வழங்கப்பட்ட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைமை பதவி இரத்து appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
