உணவு பாதுகாப்புக்காக 07 குழுக்கள் நியமனம்
23 view
கொழும்பு,செப் 13 உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கை உறுதி செய்ய, கிராமிய பொருளாதார மேம்பாட்டு மையங்களை வலுவூட்டும் பல்துறைசார் கூட்டுப் பொறிமுறையொன்றை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (13) ஆரம்பித்து வைத்தார். எந்தவொரு நெருக்கடியான நிலையிலும் மக்கள் ஆரோக்கியமான உணவைப் பெறுவதற்காக சமூக – பொருளாதார சூழலை உருவாக்குவதே இதன் எதிர்பார்ப்பாகும். “உணவு இன்மையால் எந்தவொரு குடிமகனும் பட்டினியால் வாடக்கூடாது” மற்றும் “எந்தவொரு குழந்தையும் போஷாக்கு குறைபாட்டால் பாதிக்கக்கூடாது” என்பதே ஜனாதிபதியின் எதிர்பார்ப்பாகும். இந்தப் பொறிமுறை ஏழு குழுக்களின் ஊடாக முன்னெடுக்கப்படும். ஜனாதிபதியின் தலைமையில் தேசிய உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்குச் சபை இயங்குகிறது. உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கிற்கான தேசிய கூட்டுப் பொறிமுறை, ஜனாதிபதியின் செயலாளரின் தலைமையில் இயங்கும். உணவுப் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைக் குழு பிரதமரின் செயலாளரின் தலைமையில் இயங்கும். உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கிற்கான ஒருங்கிணைந்த மாகாண பொறிமுறை, மாகாண ஆளுநர்கள் தலைமையில் இயங்கும். உணவுப்…
The post உணவு பாதுகாப்புக்காக 07 குழுக்கள் நியமனம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உணவு பாதுகாப்புக்காக 07 குழுக்கள் நியமனம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
