பெண் பொலிஸார் குளிப்பதை கூரையை பிய்த்து பார்த்த சார்ஜென்ட் கைது!
9 view
பெண், பொலிஸார் குளிப்பதை, கூரையின் தகரத்தை நீக்கிவிட்டு அதிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த பொலிஸ் சார்ஜென்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என கறுவாத்தோட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், கொழும்பு-07, மலலசேகர மாவத்தையில் உள்ள பொலிஸ் கலாசார பிரிவில் இணைந்து சேவையாற்றும் பெண் பொலிஸ் அதிகாரிகள் தங்கியிருக்கும் வீட்டின் குளியல் அறையின் கூரையில் பொருத்தப்பட்டிருக்கும் தகரத்தை கழற்றிவிட்டு, பெண் பொலிஸார் சிலர் குளித்துக்கொண்டிருப்பதை பார்த்து ரசித்துக்கொண்டிருந்த பொலிஸ் சார்ஜன்டனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட், முக்கிய பிரமுகர் பாதுகாப்பு பிரிவில் சேவையாற்றுபவர் என்றும் கைது செய்யப்படும் போது, அவர் மதுபோதையில் இருந்துள்ளார் என்றும் விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது. அவர், பிரபல அமைச்சர் ஒருவரின் பாதுகாப்பு கடமையிலேயே ஈடுபடுத்தப்பட்டிருந்தார் என்றும் அறியமுடிகின்றது. அதாவது, பெண் பொலிஸ் தங்கிருக்கும் வீட்டின் மதில்மேல் ஏறி குதித்து, குளியல் அறையின் கூரையின் மீதேறி, தகரத்தை கழற்றிவிட்டே இவ்வாறு பார்த்துக்கொண்டிருந்துள்ளார். குறிப்பாக,தாங்கள் குளித்துக்கொண்டிருப்பதை யாரோ, கூரையில் இருந்து…
The post பெண் பொலிஸார் குளிப்பதை கூரையை பிய்த்து பார்த்த சார்ஜென்ட் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பெண் பொலிஸார் குளிப்பதை கூரையை பிய்த்து பார்த்த சார்ஜென்ட் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
