தொடர் பாதிப்புக்களை எதிர்நோக்கும் மன்னார் மீனவர்கள்- சமாசத்தின் செயலாளர் கவலை!
6 view
மன்னார் தீவு பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற காற்றாலை மின் உற்பத்தி கோபுரம் அமைத்தல் மற்றும் கனிய மண் அகழ்வு காரணமாக மீனவர்கள் எவ்வாறான பாதிப்புக்களை சந்திக்கின்றார்களோ அந்த பாதிப்புகளையே மன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட உள்ள இறால் வளர்ப்பு பண்ணையினாலும் மீனவர்கள் பாதிப்பை எதிர் நோக்குவார்கள் என மன்னார் மாவட்ட மீனவ சங்க சமாசத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் தெரிவித்தார். மன்னாரில் இன்று (13) செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னார் மாவட்டத்தில் வழங்கப்படுகின்ற பண்ணை வளர்ப்புக்கு குறிப்பாக கடலட்டை,மீன்,இறால் வளர்ப்பு போன்றவற்றிற்கு வழங்கப்படுகின்ற அரச காணிகளாக இருந்தாலும் சரி,தனியார் காணிகளாக இருந்தாலும் சரி நாங்கள் ஏற்கனவே குறித்த வளர்ப்பு திட்டங்களுக்கு எதிரானவர்கள் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். ஆனால் குறித்த வளர்ப்பு திட்டம் வழங்கப்பட்ட முறையில் நிறைய முறைக்கேடுகள் காணப்படுகின்றது.ஆரம்பத்தில் சீன கம்பனிகளுக்கு வழங்கப்படுவதாக கூறப்பட்ட விடயம்…
The post தொடர் பாதிப்புக்களை எதிர்நோக்கும் மன்னார் மீனவர்கள்- சமாசத்தின் செயலாளர் கவலை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தொடர் பாதிப்புக்களை எதிர்நோக்கும் மன்னார் மீனவர்கள்- சமாசத்தின் செயலாளர் கவலை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
