மசாஜ் நிலையம் என்ற பெயரில் இயங்கிவந்த விடுதி! கொழும்பில் சிக்கிய பெண்கள்!
15 view
கொழும்பு, கல்கிஸை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் இயங்கிவந்த விடுதி இன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. இதன்போது குறித்த விடுதியில் இருந்து நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விடுதியை நடத்தி வந்த பெண் உள்ளடங்களாக நான்கு பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். பல்லேவெல, மாத்தறை, தெஹிவளை, கலபட ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 27, 35, 40, 61 வயதுகளையுடைய நான்கு பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். பிற செய்திகள்
The post மசாஜ் நிலையம் என்ற பெயரில் இயங்கிவந்த விடுதி! கொழும்பில் சிக்கிய பெண்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மசாஜ் நிலையம் என்ற பெயரில் இயங்கிவந்த விடுதி! கொழும்பில் சிக்கிய பெண்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
