மரத்தில் ஏறிய சிறுத்தை புலியை உயிருடன் பிடிக்க எடுத்த நடவடிக்கை!

15 view
அட்டன், டிக்கோயா – வனராஜா சமர்வில் தோட்டப்பகுதியில் உள்ள மரமொன்றில் ஏறிய சிறுத்தை புலியை உயிருடன் பிடிக்க எடுத்த நடவடிக்கை தோல்வியடைந்ததென நல்லதண்ணி வனவிலங்குகள் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர். இன்று (07.08.2022) காலையிலேயே, சமர்வில் தோட்ட பகுதியில் உள்ள மரக்கறி தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த வலையில் சிக்கி காயமடைந்த குறித்த சிறுத்தை காயத்துடன் கம்பியில் அகப்பட்டவாறே மரத்தில் ஏறியுள்ளது. நான்கு அடி நீளம் கொண்ட ஆண் சிறுத்தை, மரத்தில் இருப்பதை அவதானித்த பிரதேசவாசிகள், அட்டன் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து. சம்பவ இடத்துக்கு பொலிஸார் வருகைத் தந்ததுடன், சிறுத்தையை பிடிப்பதற்காக நல்லதண்ணி வனவிலங்குகள் அலுவலக அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளனர். இதனையடுத்து, சிறுத்தையை உயிருடன் பிடிக்கும் நடவடிக்கையில், நல்லதண்ணி வனவிலங்குகள் அலுவலக அதிகாரிகள் மற்றும் பொலிஸார் நடவடிக்கை எடுத்ததுடன், சிறுத்தை ஏறிய மரத்தை வெட்டியுள்ளனர். இதன்போது சிறுத்தையின் மீதே மரம் விழுந்ததால் சிறுத்தை உயிரிழந்ததாகவும் தெரிவித்த அதிகாரிகள் பிரேத பரிசோதனைக்காக சிறுத்தையை ரந்தெனிகல வனவிலங்குகள் திணைக்களத்துக்கு…
The post மரத்தில் ஏறிய சிறுத்தை புலியை உயிருடன் பிடிக்க எடுத்த நடவடிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース