நாட்டுக்காக அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைக்கும் வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவோம்”- ரிஷாட் எம்.பி !
18 view
பதவிகளுக்கென கட்சிகளை ஒன்று சேர்க்காமல், நாட்டுக்காக அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைக்கும் பொதுவான வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவோம்” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் எம்.பி! பதவிகளுக்கென கட்சிகளை ஒன்று சேர்க்காமல், நாட்டுக்காக அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைக்கும் பொதுவான வேலைத்திட்டம் ஒன்றை முன்வைக்குமாறும், அந்த வேலைத்திட்டத்திற்கு எமது ஆதரவு கிடைக்கும் எனவும் ஜனாதிபதியிடம் தெரிவித்ததாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் குறிப்பிட்டார். சர்வகட்சி தேசிய வேலைத்திட்டம் தொடர்பில் ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர், ஊடகங்களுக்கு (06) கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். தொடர்ந்து பேசிய அவர், “நாடு எதிர்கொண்டுள்ள மோசமான நிலையை மாற்றி அமைப்பதற்காகவும், மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் இன்னோரன்ன தேவைகளை எளிதில் நிறைவேற்றும் வகையிலும், கியூவில் நின்று பொருட்களை பெரும் கலாச்சாரத்தை முற்றாக ஒழிக்கும் வகையிலும் ஜனாதிபதி எடுக்கும் நல்ல நடவடிக்கைகளுக்கு நாம் பூரண ஒத்துழைப்பு நல்குவோம் எனவும்…
The post நாட்டுக்காக அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைக்கும் வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவோம்”- ரிஷாட் எம்.பி ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாட்டுக்காக அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைக்கும் வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவோம்”- ரிஷாட் எம்.பி ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
