நாட்டைக் கட்டியெழுப்புவதே அனைவரினதும் பொதுவான இலக்காகும்-சஜித் வேண்டுகோள்!
42 view
நாட்டைக் கட்டியெழுப்புவதே அனைவரினதும் பொதுவான இலக்காகும் எனவும், அதற்காக தமது தனிப்பட்ட இலாப எதிர்பார்ப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஒன்றிணைய வேண்டும் எனவும், இது வெறும் பதவிப் பரிமாற்றமாக இருக்காது,குழு அமைப்பு மூலம் நாட்டைக் கட்டியெழுப்புவதில் முனைப்பாக பங்களிப்பை வழங்கக்ககூடிய ஒன்றாக இருக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். இதற்கமைய இது சர்வ கட்சிகளின் கூட்டு வேலைத்திட்டம் எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இதற்கு அனைத்துத் தரப்பினரின் பங்களிப்பையும் பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் கூறினார் . குறிப்பாக 19 ஆவது திருத்தத்தை நல்லாட்சி அரசாங்கம் கொண்டு வந்ததாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,அதனை மீண்டும் அமுல்படுத்த வேண்டும் எனவும், தற்சமயம் துறைசார் மேற்பார்வைக் குழு அமைப்புக்கு அப்பாற்பட்ட, புதிய சக்தி வாய்ந்த குழு முறையின் ஊடாக பாராளுமன்றத்தை முனைப்புடனான பொது கூட்டு வேலைத்திட்டத்தின் ஊடாக வழிநடத்த வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். இதற்கு அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைப்பது…
The post நாட்டைக் கட்டியெழுப்புவதே அனைவரினதும் பொதுவான இலக்காகும்-சஜித் வேண்டுகோள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாட்டைக் கட்டியெழுப்புவதே அனைவரினதும் பொதுவான இலக்காகும்-சஜித் வேண்டுகோள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
