கொழும்பில் உள்ள ஏழை மக்களுக்கு உலர் உணவுகள் வழங்கிவைப்பு!(படங்கள் இணைப்பு)
22 view
வடகொழும்பு பிரதேசத்தில் தெரிவுசெய்யப்பட்ட பெண் தலைமைத்துவம் கொண்ட குடும்பங்களுக்கு சர்வதேச இசைக் கல்விக்கான பயிற்சி நிலையத்தின் இலங்கை தூதுவர் அதிவணக்கத்துக்குரிய பிதா அருட்கலாநிதி எஸ். சந்ரு பெர்னாண்டோ தலைமையிலும், IDM Nations Campus International கல்வி நிறுவனத்தின் தவிசாளரும், தேசிய ஒருமைப்பாட்டு முன்னணியின் தலைவரும், ஜனனம் அறக்கட்டளையின் தலைவருமான கலாநிதி.வி.ஜனகனின் ஏற்பாட்டில் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன. இதற்கமைய இன்றைய தினம் தெரிவு செய்யப்பட்ட 150 இற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன. நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலவுகின்ற இந்த தருணத்தினை அடிப்படையாக கொண்டு மக்களின் ஜீவனோபாய சுமையயை குறைக்கும் வகையில் இவ்வாறு உணவு பொருட்கள் வழங்கப்பட்டதாக ஜனனம் அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி.வி.ஜனகன் தெரிவித்துள்ளார். மேலும் இதற்கு முன்னரும் கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் இவ்வாறு உலர் உணவு வழங்கி வைக்கப்பட்டுள்ளதுடன், மேலும் பல பகுதிகளில் வசிக்கும் பெண் தலைமைத்துவம் கொண்ட குடும்பங்களுக்கு இவ்வாறு உலர்…
The post கொழும்பில் உள்ள ஏழை மக்களுக்கு உலர் உணவுகள் வழங்கிவைப்பு!(படங்கள் இணைப்பு) appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கொழும்பில் உள்ள ஏழை மக்களுக்கு உலர் உணவுகள் வழங்கிவைப்பு!(படங்கள் இணைப்பு) appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
