பிரபாகரனைவிட தெற்கு பயங்கரவாதம் நாட்டில் பாரிய அழிவை ஏற்படுத்தியுள்ளது! – நீதி அமைச்சர்
17 view
பிரபாகரனைவிட தெற்கு பயங்கரவாதம் பாரிய அழிவை நாட்டில் ஏற்படுத்தி இருக்கின்றது. அவ்வாறானதொரு நடவடிக்கையை மீண்டும் ஏற்படுத்தவே போராட்டம் மூலம் முன்னெடுக்கப்படுகிறது. அதற்கு நாட்டு மக்கள் இடமளிக்கக்கூடாது என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ் தெரிவித்தார். அத்துடன் மக்கள் பலத்துடன் அதிகாரத்துக்கு வரமுடியாத மறைமுக அரசியல் சக்திகள் இந்த போராட்டத்துக்குள் மறைந்திருக்கின்றன. இது பாரிய நிலைமையாகும் நீதி அமைச்சில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். மக்கள் ஆணைமூலம் அதிகாரத்துக்கு வரமுடியாத மறைமுக அரசியல் சக்திகள் போராட்டத்துக்குள் மறைந்திருக்கின்றன. இது பங்கரமான நிலைமையாகும். போராட்டத்துக்குள் பயங்கரவாதிகளும் நுழைந்திருக்கின்றனர். உண்மையான போராட்டக்கார்களின் தலைவர்களுடன் நான் கலந்துரையாடி இருக்கின்றேன். அவர்களுடன் இணக்கப்படாட்டுக்கு நாங்கள் வந்தோம். அவர்களின் கோரிக்கையாக இருந்தது முன்னாள் ஜனாதிபதி பதவி விலகவேண்டும் என்பதாகும். அதுவரைக்கும் அவர்களின் போராட்டம் வெற்றிபெற்றது. போராட்டம் மூலம் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை பதவி விலகியது அதன் பின்னர் அரசியலமைப்பின் பிரகாரமே செயற்படவேண்டும். அதற்கு…
The post பிரபாகரனைவிட தெற்கு பயங்கரவாதம் நாட்டில் பாரிய அழிவை ஏற்படுத்தியுள்ளது! – நீதி அமைச்சர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பிரபாகரனைவிட தெற்கு பயங்கரவாதம் நாட்டில் பாரிய அழிவை ஏற்படுத்தியுள்ளது! – நீதி அமைச்சர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
