சிறுவர்களின் மனோ நிலையை மோசமாக பாதிக்கும் பொருளாதார நெருக்கடி! ஆய்வில் தகவல்
17 view
இலங்கையின் மூன்றிலொரு குடும்பம் கடந்த ஆறு மாதத்தில் தங்களது பிள்ளையின் நடத்தையில் எதிர்மறையான மாற்றத்தை அவதானித்துள்ளது என சேவ் த சில்ரன் தெரிவித்துள்ளது. இலங்கை பொருளாதார வீழ்ச்சியை நோக்கி சென்றுக்கொண்டுள்ள சூழலில் இந்த நிலை காணப்படுவதாக சேவ் த சில்ரன் தெரிவித்துள்ளது. சேவ் த சில்ரன் மேற்கொண்ட ஆய்வின் மூலம் இது தெரியவந்துள்ளது. இலங்கையின் ஒன்பது மாவட்டங்களை சேர்ந்த 2300 குடும்பங்களை அடிப்படையாக வைத்து சேவ் த சில்ரன் ஆய்வொன்றினை மேற்கொண்டுள்ளது. ஆய்வில் கலந்துகொண்ட நான்கில் மூன்று குடும்பங்கள் தங்களின் பிள்ளைகளின் உணர்ச்சி மற்றும் மனோநலத் தேவைகளிற்கு இடமளிப்பதற்காக அவர்களுடன் அதிகநேரத்தை செலவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளன. அதிகரிக்கும் பணவீக்கம், நாளாந்த மின்வெட்டு, உணவு, மருந்து, எரிபொருள் போன்றவற்றிற்கான தட்டுப்பாடுகள் குடும்பங்களை சமாளிக்கும் திறனுக்கு அப்பால் கொண்டு சென்றுள்ளன என தெரிவித்துள்ள சேவ் த சில்ரன், குடும்பங்களின் பொருளாதார அழுத்தம் காரணமாக பத்தில் ஒரு குழந்தை பசி உணர்வை இழந்துள்ளது வன்முறை குணம் அதிகரித்துள்ளது.…
The post சிறுவர்களின் மனோ நிலையை மோசமாக பாதிக்கும் பொருளாதார நெருக்கடி! ஆய்வில் தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சிறுவர்களின் மனோ நிலையை மோசமாக பாதிக்கும் பொருளாதார நெருக்கடி! ஆய்வில் தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
